Tuesday, May 19, 2009

உதவி தேவை படுவோருக்கும் ,உதவ மனம் உள்ளவர்களுக்கும் ஓர் அருமையான இணைய தளம்


இன்றைக்கு ஓர் அருமையான இணைய தளத்தை பார்த்தேன் அதில் உதவி தேவை படுவோரும் ,உதவ மனம் உள்ளவர்களும் தங்களை பற்றிய தகவல்களை பதிந்துகொள்ளலாம்.
இந்த இணையதளத்தின் மூலம் செய்ய படும் உதவிகள் என்ன?
மருத்துவ உதவி ,கல்வி உதவி ,உடல் ஊன முற்றவர்களுக்கு உபகரணங்கள்உணவு,உடை ,ஆபரேஷன் உதவி,வேலை வாய்ப்பு,பொருள் உதவி ,பணஉதவி,இடம் உதவி ,இரத்தம் இன்னும் ஏராளமான உதவிகள் கொட்டி கிடக்கின்றன .
இரக்க மனம் உள்ளவர்கள் ஒருமுறை சென்று பாருங்கள் மற்றவருக்கும் அறிமுகபடுத்துங்கள் .

முகவரி :
http://www.help2serve.org

Thursday, March 19, 2009

மரியாதையுடன் விஜயகாந்த்






மீண்டும் களத்தில் விஜயகாந்த் அதுவும் மரியாதையுடன், விக்ரமன் என்றாலே வெற்றி படஇயக்குனர் என்ற பெயர் தமிழ் திரை உலகில் இருந்து வந்தது சமிப காலங்களில் அவருடைய சிலபடங்கள் தவிர்க்க முடியாத தோல்வியை சந்தித்தது அதற்கான காரணங்கள் காலத்திற்கு ஏற்ப அவர்மாறததுதான் .

எது எப்படியோ தற்பொழுது மீண்டும் மரியாதை என்ற பெயருடன் இரண்டு விஜயகாந்துகள்(ஒருத்தர்தான் சும்மா ஒரு மாற்றத்துக்கு)
நடிக்க
அம்மா
கிரியேசன்ஸ் டி.சிவா தயாரிக்க விக்ரமன் இயக்கி உள்ளார். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் மற்றும் மீனா , அம்பிகா ஆகியோர் நடித்து உள்ளனர் .

ஏற்கனவே விஜயகாந்தை வைத்து விக்ரமன் இயக்கிய வானத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் அது மட்டுமில்லாமல் அம்மா
கிரியேசன்ஸ் டி.சிவா அவர்களின் சரோஜா படமும் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளதால் இந்த படம் மக்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது .

மேலும் ராஜ் டிவி வழங்குவதால் கண்டிப்பாக வெற்றி படமாகும் என்பதில் ஐயமில்லை இசை விஜய ஆண்டோனி இப்படத்தின் பாடல் வெளியீடு வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது